bogar 7000_1_100
போகரின் சப்த காண்டம் - 7000
1.
ஆனந்த மாய்நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர்பாதம்
வானந்த மாகிநின்ற கணேசன்பாதம் மருவியதோர் மூலத்தின் நந்திபாதம்
தானந்த மாகியதோர் காளாங்கிபாதம் கனவருட வியாக்கிரமர் பதஞ்சலிபாதம்
போனந்த மாகியதோர் ரிஷிகள்பாதம் போற்றி ஏழாயிரம்நூல் பகலுவேனே
2.
தானான தாமிரபரணி ஏழுகாதம் தாக்காண காவேரி எழுபதுகாதம்
வேனான கங்காவும் எழுநூறுகாதம் வேகமுடன் சென்றுமல்லோ குளிகைகொண்டேன்
கானான கடலேழும் சுற்றிவந்து காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்டு
பாணான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் சப்தகாண்டம் பண்பாய்த்தானே
3.
பண்பான வைத்தியமும் வாதமார்க்கம் பரிதான ஜெகஜால குளிகைமார்க்கம்
நண்பான சித்தர்களின் மறைவுமார்க்கம் நலமான ராஜாக்கள் இருந்தமார்க்கம்
திண்பான தேவர்தாம் கடந்தமார்க்கம் திறமான மனோவேகம் செல்லும்மார்க்கம்
தண்பான சாஸ்திரங்கள் தொகுப்புமார்க்கம் தயவான மூலிகையுட ரகசியங்காணே
4.
காணவே பாண்டவா ளிருந்தமார்க்கம் கதிர்மதியின் கிரிகைகளி லிருக்குமார்க்கம்
பூணவே பிரமாலய தேவாலயங்கள் புகழான பாசமான மலைகள்மார்க்கம்
தோணவே சரக்குகளின் வைப்புமார்க்கம் துறையான ஆதிமலைக ளிருக்குமார்க்கம்
ஈணவே மிருகங்கள் மகத்துவமார்க்கம் எழிலான பட்ஷியுட மார்க்கம்பாரே
5.
பார்க்கவே மனிதரிடம் பேதாபேதம் பாங்கான உரைகோடி சொந்தங்கோடி
ஏர்க்கவே அதிசயங்கள் எடுத்துக்கூற ஆதிசேஷ னாலும் ஆகா
சேர்க்கவே உலகத்தின் மகிமைகோடி சிறப்பான அதிசயங்கள் உள்ளதெல்லாம்
ஆர்க்கவே சித்தர்களை வணங்கியானும் அன்பாக போகரிஷி அறைந்திட்டேனே
6.
அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்க ளெல்லாம்பார்த்து
குறைந்திட்டேன் போகரே ழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
வறைந்திட்டேன் நாலுயுக வதிசாயங்கள் யாவும்வாகாக பாடிவைத்தேன் சத்தகாண்டம்
வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே
7.
புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவி தெல்லாம் வாதம்போச்சே
8.
போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு
தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே
9.
கரிமுகன் பதம்போற்றி கடவுள்பதம்போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம்போற்றி
அரிஅயன் பதம்போற்றி வாணிபதம்போற்றி அருள்தந்த லட்சுமிதன் ஆயிபதம்போற்றி
வரியமாம் பாட்டனென்ற மூலர்பதம்போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம்போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே
10.
தானான ஏழுலட்சம் சிவன்தான்சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
பானான பாட்டுரைதான் கருக்கள்கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
தேனான காளாங்கி ஐயரையுங்கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே
11.
காணவே மூலமது அண்டம்போல காரணமாய் திரிகோண மாகிநிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
நாணவோ நாற்கமலத்து அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
மூணவே முக்கோணத்துள் ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே
12.
அகாரத்தின் மேலாக கணேசன்நிற்பார் ஆதியொரு கோணத்தில் உகாரம்நிற்கும்
உகாரத்தின் வல்லமையால் சக்திநிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ் குண்டலியாஞ்சக்தி பெண்பாம்பு போல்சுருட்டி சீறிக்கொண்டு
சுதாரமாய் சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீத மென்ற அவத்தைதானே
13.
அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய்நிற்கும்
நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
வவத்தைக்கும் வாய்திறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே
14.
தானான லகிமாவும் கிரிமாவோடு தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி பேரேட்டுத் தேவரையும் தளத்தில்நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார் ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி வங்கென்று வாங்கியே கும்பித்ததே
15.
ஊதினால் என்வாசத்தில் அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
போதினால் ஆயிசொன்ன ஏவல்கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
ஏதினால் இதுக்குல்லே வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே
16.
வாங்கியே நந்திதனில் சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
தாங்கியே வங்கென்று இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
தேங்கிய வல்லமையாஞ் சத்திதானும் சிறந்திருந்தால் பச்சைநிற மாகுந்தானே
17.
பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
மொச்சையாய் மூலமது சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சைநிற காயமுமே கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
துச்சைநிற வாதமது சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே
18.
பாரென்று புரிஅஷ்ட நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
காரென்ற தீபவொளி கண்ணோகூசும் கணபதிதான் கண்முன்னே நிர்த்தம்செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
நேரென்ற சதாசிவத்தின் நிலையும்சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே
19.
போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
சேச்சென்ற வீரசத்தம் கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டிவாங்கு
மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே
20.
உன்னியே பழகுமட்டும் கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரான சுழினைதன்னில் கெட்டிசேரும்
நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே
21. வாசியோகம்
நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப் பிணமாக சொல்லுக்கொக்கும்
பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோமே
22.
சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை அதைத் தாண்டி மேலேயேறே
23.
ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதையுள்ளே காட்டிக்கொண்டு
மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோச மாகியல்லோ பிரலப்பண்ணும்
தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே
24.
கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாய்ஞானம் பேச்சுமாச்சே
25.
ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்துபார்த்து
மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே
26.
இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
குறிப்பான மாத்திரைதான் ஏறஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே
27.
வார்த்தையால் தர்க்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி
தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே
28.
மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தை சுத்திபண்ணும்
காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில் கண்ணொளிதான்மீறும்
ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே
29.
மாட்டவே மார்க்கமாய் மூலத்தில்நில்லு மறவாதேயொன்றில் நின்று தேறினாக்கால்
ஆட்டவே அடிமரத்தை தொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
மூட்டவே மூலமது பழகினாக்கால் முகிந்தவிட மாறுகடந் தப்பால்தாண்டி
தூண்டவே துவாதசாந் தத்தில்சொக்கிச் சுருதிமுடிந் திடமறிந்து சேரலாமே
30.
சேரவே சகஸ்திரமா முண்டகத்தின்பூவைச் சேர்ந்தேறிச் சந்திரமண் டலத்தில்புக்கு
ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங் குண்டலியாந்தாய்க்கும்
பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம் பணிமாரி விவேகத்தாலே
தூரவே சோமப்பா லுகந்தளித்து தூயநால் மூலத்தில் குதிரைமுனைகட்டே
31.
கட்டியே அஞ்சலிபண்ணி குண்டலியாந்தாயை மனதில்வைத்து கணபதி வல்லபைத்தானும்
மூட்டியே முகிழ்ந்திரந்து வழிதாவென்று முனையான சத்தியென்பாய் மயக்கந்தீர
தெட்டியே வஸ்துவைத்தான் பாணம்பண்ணி செயலறிந்து கபாடமது திறப்பாரப்பா
எட்டியே நந்திபத மிறைஞ்சிபோற்று ஏற்றமாந் தொழிலெல்லாம் எளிதிலாமே
32.
எளிதிலே நந்திவந்து இரக்கமாகி எட்டா மறுபத்து நாலுமீவார்
நெறியிலே வாதங்கை கட்டிநிற்கும் நீச்சான குருவகைகள் நிஜமாய்தோன்றும்
களியிலே காயமது சித்தியாகும் கருத்தூனித் தான்வாய்க்கக் கலந்துபோவாய்
அளிகிலே ஆலமுண்டான் ஆட்டுக்காணும் மாச்சரியம் சிலம்பொலியும் மயக்குமாமே
33.
அயிக்கமாய் விழுகாதே காமத்தீயில் அனுதினமும் வேதாந்த முடிவைப்பாரு
ஒயிக்கமாய் ஒருவருடன் வாயாடாதே உண்மையா யிருந்துஉன்னில் உண்ணிப்பாரு
தியக்கமாய் பொய்கொலைகள் செய்திடாதே சேர்த்தேறு வாசியென்ற தேசிதன்னில்
மயக்கமாய் வஸ்துவைநீ பாணம்பண்ணி மத்தாலே யழியாதே மாய்கைநீக்கே
34.
நீக்கியே ஐம்புலனை அருத்துசாடு நித்திரையைத் தள்ளிவிட்டு காலைப்பண்ணு
தூத்தமரே சகபூதந்தானும் சுயம்பான கும்பகமும் கணக்காய் சூட்டு
தாக்கியே அமுர்தவெல்லந் தன்னையுண்ணு சங்கற்ப விகற்பமென்ற சட்டைநீக்கு
வாக்கியே பிராணயம் வரிசைதன்னை மறவாமல் மாட்டுதற்கு மார்க்கஞ்செய்யே
35.
செய்துமே யுற்றுப்பார் கருத்தையூனித் திகையாதே புலன்களோடு கணேசன்காண்பார்
கொய்த்துமே பூசைபண்ணி குட்டிக்கொண்டு கூர்ந்துமே வாசிதன்னை இருத்திவைத்து
ஒய்த்துமே ஓம்சிறியும் கிறியுங்கிளியும் உயரயெங் கணபதி யென்றுச்சரிக்க
நய்ந்துமே நந்தியர்கொடிக் கதிர்கொப்பு நற்சுழியில் ஒளிகண்டால் நமநாடானே
36.
நாடாமற் போவதென்ன என்றுகேட்க நற்சத்த பரிசமொடுரூபம் ரசகெந்தி
தாடாமல் சத்தோடு பொறிகளாஞ்சுந் தனக்கேற்ற வழிப்போக்கில் மனந்தானோடும்
தேடாமல் காதையைநீ போற்றினாக்கால் சொல்லொன்று கேளாது சூட்டிப்பாரே
37.
சூட்டிப்பார் இன்னமும்நீ பரிட்சைகேளு துடித்தன்னை போற்றிடிலோ ரூபங்காணார்
ஊட்டிப்பார் அமுதந்தன்னை அசைத்துக்கொண்டால் வளமான வாசமொன்றும் தோன்றிடாது
ஊட்டிப்பார் வாய்தன்னில் உப்பையிட்டால் உருக்கறிச்சு உப்பென்ற ருசியேகாணும்
ஓட்டிப்பார் என்பது முடலிலூர்ந்தா லேற்றமாம் அறிவாலே பரிசமாச்சே
38.
ஆச்சிசிந்தனை வேரால் நின்றாயானால் அரிருமாகா மந்திரியின் வேகமாச்சு
ஓச்சிந்து மனத்துணித்தம் பிராணயாமம் உகந்தேறி வாசியைநீ பிடித்தேபூரி
முச்சிந்த மூலத்தில் முதிர்ந்துகும்மி முனையான வயமுமாச்சு விவரிடாமல்
காச்சிந்த மூலத்தில் நின்றுநின்று கதறக்கண்டு தெரியும் மேலேயேறே
39.
ஏறியே பாரென்று ஐயர்சொன்னார் எனையீன்ற ஆயர்காளாங்கி நாதர்
பாருஇது வழியென்று பக்குவத்திச்சொன்னார் பதஞ்சலியும் வியாக்கிரமர் சிவயோகமும்
மீறியோ அதற்குவிளக்கஞ் சொன்னார் மிக்கபராபரித்தாயும் இதுவே சொன்னாள்
ஆரியோ தான்பார்த்து ஆறுவத்தை அநுபவித்து ஏழாயிரத்தில் அமைத்திட்டேனே
40.
அமைத்திட்ட சிகாரமென்ற அட்சரத்தா லழும்பாகான் வெளியில்லா கனமேசெய்வார்
குமைத்திட்ட வெளிதன்னில் கூகூகூகூ வென்று
நமைத்திட்டொரு சொல்லால் ஏழுகோடி காகமெனும் விரவியென்ற கடலில் வீழ்வார்
சிமைத்திட்ட சித்தமெல்லாம் மூலத்துள்ளே சிக்கென்று உன்னியே தியானிப்பாரே
41.
தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம் திகட்டாம துண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாக மனவிலங்கு மாட்டுவாரே
42.
மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்த மயமுமாகி
பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய் திடாகரித்து நாதாந்த பெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந் தத்தில்புக்கி சுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே
43.
துதிசெய்து மூலதனந் தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்ட கவளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான் நடுபீசம் லங்னம் ஆமே
44.
சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற துரியாதிக் கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடைய நிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே
45.
அஞ்சான பொன்னிற பிரமன்பக்க கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகப்பை அவர்தம் தண்டுகமண்டலமும் அட்சத மாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை பகர்ந்தநவ ரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்துண்ணே
46.
உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே
47.
என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமே கம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர் கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே
48.
மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்ற பிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல் பத்திதழ்தான் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுட மிடங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென் றறியலாமே
மணிபூரகம்
49.
அறிந்தமணி பூரத்தின் வீடுமாகும் அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்கு சக்கரமும் கருடவாகனமே
50.
வாகனமாய் லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமா யரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாய்தான் திரோதமையு மயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே
51.
வீடாக திரோதகையு மிருந்தவீடு வெகுபோகங் காமியத்தை விடுத்தவீடே
வாசா மனங்கலங்கி நின்றவீடு மாயமெல்லாங் குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக் கருத்தழிந்து பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே
52.
தாக்கியே சந்திரமண்டலத்தில் பூவை சகஸ்திரமா மிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபல தூபந்தானும் பண்பாக மனத்தாலே பாவகமே பண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப் பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே
53.
செய்யவே மாலொடு லட்சுமிதானும் சித்தமகிழ்ந் தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு பலனுஞ்சொல்வார் பலபலவாந் தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல் சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக் குண்மைசொல்வார்
ஐயவே அஷ்டாங்க மனைத்தும்பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே
அநாகதம்
54.
அறிவுக்கு மேலேறி யெட்டங்குலத்துக் கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோண மாருதற்கு முதிர்வளையம் பனிரெண் டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்கு யிதமில்நிற்கும் அட்சரந்தான் ஏற்றமாஞ் சழித்திய துக்கிருப்புமாமே
55.
ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமது தேயுதானாகும்
தேனென்ற செம்மைநிறச் சிவப்புமாகும் தேய்வுட பீசமது றவ்வுமாகும்
ஓமென்ற வொளிகோடி பானுவாகும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே
56.
தூங்கவே எழுப்பிமெல்ல பெண்ணைசேர்க்கும் சுகமஞ்சுஞ் சிவன்கைக்குள் தொழில்தானப்பா
ஓங்கவே ரத்தினசிம் மாசனமுமாகும் உமாசத்தி யாகுமடா அஸ்திமாலை
மாங்கவே மான்மழுவும் வரிப்புலித்தோல் மகரகொடி சூரியப் பிரகாசமாகும்
தாங்கவே தேவதேவா சர்ப்பாசனம் தரித்த தாயார் தாமே
57.
தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று
ஓமென்று உன்னியே உத்தமிதாய்பதத்தை உறுதியாய் மனந்தன்னை ஓங்கப்பண்ணி
ஆமென்று ஐம்புலனை பறிவாய்தள்ளி ஆதி அந்தமில்லா தாயேஎன்று
காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாக மனந்தன்னை ஒளியில்வையே
58.
ஒளியான நந்திவா கனமுமாகும் ஒருசாம வேதத்தி னுருப்புமாகும்
கனியான காமப்பால் மாச்சல்செய்து கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி
வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாய் ஞானமெல்லாம் விழலாய்ப்பண்ணும்
கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடே கூர்ந்திடாயே
59.
கூர்ந்திட்டாடு வளையில் காந்திதானும் கூகைக்கு மாக்காலம் குறிகண்டாப்போல
ஆர்த்திட்டு அவர்பதத்தில் மனவிலங்குமாட்டி அறிவோடே அசையாமல் அடற்குள்நின்று
ஏர்ந்திட்ட ஏறுதற்கு வழியைக்கேட்டு எட்டெட்டு சித்திக்கும் இயல்புவாங்கி
வார்த்திட்டு வாதத்தின் இனங்களெல்லாம் கேட்டு வகையான காயசித்தி மார்க்கங்கேளே
60.
கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து
தேளுமே சிவனோடு சத்திக்குந்தான் சிதையாமல் மனந்தன்னை திருவடிசேவித்து
வாழுமே மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி
மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடை தானே சுருக்காயேறே
விசுத்தி
61.
ஏறியே பனிரெண்டங்குலமே தாண்டி ஏத்தமாம் விசுத்தியென்ற தலமுமாகும்
மாறவே அருகோண வளையமொன்று மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான் அஆஇஈஉஊ வாமதுர வெயிரோஇல்லோ
துனையான எ ஐ ஒ ஔ அம் அம் ஆமே
62.
ஆம்முதலாய் பதினாறு எழுத்துமிட்டு அறுகோண நடுவேதான் வகாரம்நிற்கும்
வாமுதலாய் மஹேஸ்வரனும் மஹேஸ்வரியும் நிற்பார் மகத்தான சொப்பணத்தின் இருப்புமாகும்
பூமுதலாய் பூதமது வாயுமாகும் புகழான பீசமது அங்குமாகும்
நாமுதலாய் தாணவே தாந்தானாகும் சபல மனோவேகமாய் நாடலாமே
63.
நாட்டமாய் இவருடைய தொழிலுநன்றாய் நடத்தலொடு ஓட்டல்மயங்கிக் கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலொடு கலங்காமலிருத்தல் நிலையஞ்சின் விபரத்தை நிலைக்கக்கேளு
பூட்டமாய் பொசித்தலொடு ராகங்கேட்கல் பொங்கியே கோபஞ்சண்டை சினமடைத்தாங்கல்
ஓட்டமாய் ஓங்காரம் உன்னைக்கண்டால் உயர்வாயை திறந்திடுதல் உருதிகாணே
64.
உறுதியாம் ருசியாறு வாயினுள்ளே உரிசைதான் வாயினுக்கு பாலுமில்லை
பறுதியாம் பரமென்ற பீடமப்பா பரத்தி என்றுமோர் பண்புமாகும்
கிறிதியாமைப் பொறியின் கணையைவாங்கி பிசகாமல் நாலதனி லொக்கசேர்த்து
அறுதியாம் ஆதாரமெல்லாம் பார்த்து அப்பனே நாலுக்குள் அனைத்திடாயே
65.
அனைத்திட்ட நாலுக்குள் சிங்கென்றூணு ஆதியாம் ஓம்நமசிவா யாவென்றே
துளைத்திட்டு வாசியைநீ வாயிலூட்டில் சுருக்கிட்டு கட்டிடவே ஓடாதப்பா
பழைத்திட்டு பதினாறு தலத்தில்தானும் பாங்கான சீவகளை இருப்புமாகும்
தினைத்திட்ட சீவகளை இருந்தத்தானே சிறப்பாக பாடிவிக்கும் திறமையாமே
66.
திறமையோ புரிசையொடு உண்ணப்பண்ணும் சீவகளை இருந்துகொண்டு எட்டுநாளாய்
புறமையா இருந்துகொண்டு நாவும்பாழாய் புத்தியுள்ள சீவகளை மதிபோல்தேய்ந்து
நலுமையாய் நறைதிறையாய்ச் சேரமாண்டு நலமான ஜீவகளை போகுவதைக்காணார்
குறமையாம் நாதமது கண்டத்திற்காணும் குறிப்பான திரோதகையின் கூற்றுதானே
67.
தானான வாய்வுட வீட்டில்நின்று தம்பித்து ஆத்தாளைத்தான் விலங்குபூட்டி
போனான சந்திரன் மண்டலத்தில்பூவால் போற்றியே அடிவணங்கி வாசிபூட்டி
தேனான மேலேற வழிதாவென்று சுத்தசை தன்னிபத்தைத் தோத்தரித்து
வானான வாதசித்தி யோகசித்தி மகாசித்தி யோகசித்தி மார்க்கங்கேளே
68.
மார்க்கமாய் மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அய்யருமே யுளமகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார்
ஊக்கமாம் மஹேஸ்பரத்தின் பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே
69.
மேலேறி இரண்டு புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
மேலேறி வட்டமாம் வீடுபோலே வளையமொன்று ரெண்டிதழ்தான் எரஷரிவாகும்
ஆலேறி ஆங்கென்ற அட்சரந்தான் நடுவே ஆகாச பூதமாம் பூதபீசம்
மானேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின் வீடுமாமே
70.
வீடுமாம் வர்ணமது மேகவர்ணம் விலங்குகின்ற தொழிலதுதான் காமம்குரோதம்
வாடுவாம் லோபமொடு மோகமாகும் மதமாச் சரியத்தோடு அஞ்சாகும்
நாடுநான் முகன்மாலுஞ் சிவன்மஹேஸன் நலமாக காப்பார்கள் திகைத்துதானும்
தானுசதாசிவன் தானும் தளவாயாருந் தளவாயை கண்டாக்கால் சகலமாமே
71.
தளவாயை கண்டாக்கால் சம்சயந்தான்தீரும் சங்கற்பவகற்ப மென்ற சட்டைநீக்கும்
தளவாயை கண்டாக்கால் தாயோடே சேர்ப்பார் சச்சிதா னந்தத்தின் தன்மைகாண்பார்
தளவாயை கண்டாக்கால் சகலசித்துமாகும் தனைவானோடொத்த கள்ளனைந்து நிறமாகும்
தளவாயை ஐம்பத்தொன்றில் காணாதப்பா சாங்கமா யரைத்து நீ வாசிமாட்டே
72.
உரைத்துமே ஆக்கினையாஞ் சாக்கிரத்தில் உகந்துமே மனோன்மணியை உச்சரித்து
மரைத்துமே மந்திரத்தை சொல்லக்கேளும் மருவு கா ஏ இன் கூ ஆகல இரியுமாகும்
அரைத்தும் அசைகன் இரியுமாரு அதின்பின்பு அதிகழா யிரமமாகும்
உரைத்தும் மூக்கண்ட பஞ்சதேசாவிது உச்சரியே முனிந்துமே யுச்சரித்து மூட்டுநீயே
73.
மூட்டியே தாயாருட பதத்தைக்கண்டால் முஷ்காரமாய் கையெல்லாம் ஒருந்துட்போகும்
நாட்டியே யெடோட நாலுங்கூட்டி நாதாந்த சித்தயெல்லாம் சணத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் மயிர்ப்பான நெருப்பாறு கடக்கலாகும்
நீட்டியே நிராதாரம் அறியலாகும் நிச்சயமாய்க் குடுகளெல்லா நினைக்கலாமே
74.
நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும் நோய்மூப்பு சாடுநரை திரையும்போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்துங்காணும் கண்ணிமைக்குள் போற்றுயிர் கடிகிமீளும்
அனைக்கவே சாக்கிரத்தில் இருந்துகொண்டு ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும்பார்த்து
தனைக்கவே சரியொடு கிரிகையோகம் சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே
75.
தானான மனோன்மணியைத் தாண்டியப்பால் தணிந்ததோ ரெட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதந்தான் கூட்டிப்பாரு குறிப்பான புகழ்காணார் ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும் அகராமா மகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்துஅஞ்சும் வந்தமந்தாம் ஐங்கோணத்தில் நிற்கும்பாரே
76.
பார்க்கவே உகாரமா நடுமையத்தில் பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகராதநிர்மலன் தன்வடிவாம் பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள்வைத்து
நேர்க்கவே ஓடாமல் நிறுத்திப்பாரு நிலையாத பிரவியரும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தின் ஆதிபொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே
77.
அறியொணா பிரமாந்திரம் என்றுபேரு அதிலுடைய நிறந்தானும் படிகவர்ணம்
நெறியொண்ணா காயத்ரி யாகலின்னா நித்யநித்ய நிருபமாகும் நித்யசுத்த
பறியெண்ணாம் பரிபூரண சச்சிதானந்த பகாரிய நிரஞ்சன வித்துவங்கே
நெறியொண்ணா நிற்பாகா யதிமசியாம் மெறிவதனு சூடதம்பிர சோதயாதே
78.
தேயென்ற யிருபத்தி நாலாய்நின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து
வாவென்று வாசியைநீ இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல்
தேயென்று இருத்தியே கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க
பூவென்ற பிறவியற்ற பூரணத்தில் லயிப்பாய் போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே
79.
பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாய் பிரித்துப்பாரு
அருளான உன்மனையில் எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று
தெருளான பதினொன்றுஞ் செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன்
நருளான நந்தி யேழாயிரத்தில் நாட்டினார் நல்லநீவை நான்காணேனே
80.
காணாத மார்க்கமெல்லாம் காணும்நேராய் கடுசாக முனைமுகத்தில் கடிந்தால்சாறும்
வாணாதே யூணினால் பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும்
கோனாக குண்டலி கோத்தை நோக்கிக்கூர்ந்து பார்ப் பதினொன்று மொன்றுகாணும்
நானாதோடு மையம்நோக்கி னாக்கால் நலமான காலாந்தான் கோடிப்பானே
81.
பானான நூல்சொன்னபடி கேட்கும் பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால்
வானான வார்த்தையால் பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாய்தானும்
கானான காய்க்குமே தேங்காய்தானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம்
கோனான பறத்தினுட முடிவைப்பாரு குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே
82.
கேளுநீ மூலத்தில் குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி
நீளுநீ ரேசித்துப் பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும்
வாளுநீ நந்திவந்து வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும்
நாளுநீ வாசிவைத்து மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே
83.
நாட்டிட்ட மூலத்தைத் தாண்டிப்பின்னர் நலமான கஞ்சனு பதியிற்கூட்டி
ஒட்டியே வகாரத்தை உருத்திநோக்கி ஒளியான சிகாரத்தால் உள்ரேசிக்க
பாட்டியே பண்டான பிறவியறலாகும் பண்பாக நான்முகனைக் கண்டதாலே
மாட்டியே கஞ்சனுட பதியைத்தாண்டி மாவிருக்கும் மதியூடி மருவிநில்லே
84.
மருவியே வகாரத்தை யுட்பூரித்து வாதமாஞ் சிகாரத்தை உள்ளேரேசி
பருவியே பஞ்சநரை யெல்லாம்போக்கிப் பாலனுமாய் பதினாறு வயசுமாவார்
உருவியே யாங்கடந்து ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு
தருவியே சிகாரத்தை உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே
85.
சித்தியாம் ருத்திரன்தன் பதியைத்தாண்டி தெளிவான மஹேஸனுட பதியில்புக்கி
அத்தியாம் வகாரத்தை அசையாமல்பூரி யதுக்குள்ளே சிகாரத்தை உள்ரேசிக்கப்
பத்தியாம் சிறுபிள்ளை தானாவார்கள் பாருடலுங்கை நெல்லிக் கனிபோலாகும்
துத்தியாம் சிவயோகம் வைத்துப்பாரு துடியாகும் குளிகையெல்லாம் சுருக்கிலாமே
86.
சுருக்கான மஹேஸ்பரத்தின் பதியைத்தாண்டி சூஎன்றசதாசிவ மிடத்தே காலையூன்றி
மகத்தான சிகாரத்தை வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெவனமாகும்
செருக்கான மனோன்மணி மாதாவின்பாதம் திரமான வாசிவைத்துப் படியேபார்க்க
பெருக்கான மெய்ஞான நிராதாரந்தான் செய்வான வாசினைதான் தானும்நீயாமே
87.
நீயான குருபதத்தில் நின்றாயானால் நிலையான சிவயோக வாசிஓட்டு
தாயான பூரணமும் சகலதெரிசனமாஞ் சதமான வகரசிகாரத்தின் மார்க்கம்
வயலான வலுவைத்தான் வைத்துமங்கே மதியோடேபார் மகத்தான சித்தி
தீயான நீக்கவிட மற்றுநின்ற சிறந்திடுமே பூரணந்தான் சித்துமாதே
88.
சித்தாகப் பாய்ந்தேன்நான் அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின்சித்தஞ் சொன்னார்நந்தி
அத்தாக அண்டியஞ்சலித்து அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி
பத்தாக துனையென்றார் பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து
கத்தாக மலினியை காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே
89.
நுழைந்திட்டே நிருவிகற்ப நிறையானயோகி நேரஞ்சு தனித்தனியே கோடிசித்தர்
குழைத்திட்டு தெவிட்டாதே பார்த்துநின்றேன் சித்தாணியுனக் கெந்நாளாச்ச தென்றார்
குழைந்திட்டு கொடியறுத்து மாச்சுதென்றேன் நுறியதளஞ் சித்திப் பாரென்றார்கள்
மழைத்திட்டு நுழைந்தேன் பின்னோரண்டத்தில் மகத்தான சித்தர்க்கு கைகூப்பினேனே
90.
கைகூப்பி கட்டியதோர் பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது
கைகூப்பி நீள்சாரடைந்தயோர் களரியோரைக் கண்டு நானஞ்சி வலம்வந்தேன்
கைகூப்பி பரிவான அடுக்கொன்று தன்னில் பாய்ந்தேநான் முடியேறி பரிந்துபோந்தேன்
செய்கூப்பி அண்டமெல்லாம் சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாய்ந்திட்டேனே
91.
பாய்ந்திட்டேன் அண்டத்தில் நுழைந்துபார்த்தேன் பலகோடி சித்தர்கள் வாசித்தார்கள்
ஆய்ந்திட்டு அனைந்திடும் நூலார்தான் சொன்னார் ஐயனே எனக்கேட்டே னடிவணங்கி
காய்ந்திட்ட சிவன்தானும் தாய்கண்டுசொன்னார் தனி ஏழுலட்சத்தை கரைகண்டுபார்த்தோம்
தோய்ந்திட்ட இந்தநூல் பெருக்கமெத்த சுருக்காதே போனவென்ன வெனக்கேட்டேனே
92.
கேட்டதற்கு தரந்தான் சொன்னார்சித்தர்தானும் கிரந்தத்தை சுருக்குவதற்கு சிவனாலுமாகா
மாட்டாதற்கு ஒன்றான சாஸ்திரத்தின் மகத்துவமாஞ் சுருக்குண்டோ வென்றுகேட்டார்
சூட்டிதுக்குச் சித்தர்தான் சொன்னமார்க்கம் சருமிச்சதொகுப் பெல்லாம் தெரிந்துபார்த்து
ஏட்டத்துக்குள் ஏழுலட்சம் இயல்புதன்னை ஏற்றகல்லு வெட்டுபோல் இசைந்திட்டாரே
93.
இசைந்திட்டார் ஏழுலட்சம் இயல்பையெல்லாம் எளிதாய் ஏழாயிரம் இசைத்துவைத்தார்
பசைந்திட்ட நூலெங்கே இருக்குதெனப் பகர்ந்தார் பாக்கான தெட்சண பாகத்தில்தானும்
அசைந்திட்ட நூற்றறுபதா மண்டபத்தில் அமைத்துவைத்தார் சித்தர்கள் தான்பாரே
வசைந்திட்ட ஏடுதனில் கருவென்னசொல்லும் கருத்தை கடாட்சித்துச் சொல்லெண்பாரே
94.
என்றதோர் படிக்கின்ற நூலில்தானும் ஏற்றமாய்ப் பயனெல்லாம் சொல்லுவோமோ
வென்றதோர் நூல்தன்னில் சாரனேயுங் குருந்தான் சுருக்குமேபதினாறு அங்கந்தானும்
தின்றுமே எட்டெட்டு சித்தோடு தியங்காமல் ஆதற்கேற்க ஏற்று கிட்டார்
என்றுமே தேங்காமல் தெங்குசிவயோகம் கனமான பூரணமும் மயிக்கம்பாரே
95.
அயிக்கமே பூரணத்தில் தூங்காமல்தூங்கும் அன்பான சொருபத்தைக் காட்டும்பாரு
அயிக்கமே தூவாரார் கையிலுண்டு அவருடைய பேர்தன்னை சொல்லுமென்றார்
கயிக்குமே வாசிக்கும் குருவுமான காரணமாம் நந்தியர் காட்டும்நூலை
தியக்குமே சித்தருக்குங் கொடுத்தார்நூலை திருமூலர் அரைந்ததை திடமென்பாரே
96.
திடமான நூல்தன்னில் செப்பினதுசொல்லாய் தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம்
குடமான கோடரியொடு சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள்
தடமான லவனமொடு சத்தும்செம்பு தனியகந்த குளிகையொடு செந்நீராகும்
கடமான திருகலமும் இனக்கூட்டந்தான் கடிதான மூலிமகா அவுஷதந்தானே
97.
அவுஷதமொடு வவுஷதவகை பதினேழும் அடங்களுஞ் சொல்லு ரெண்ணாயிரத்துள்ளே
வவுஷதமொடு ஏழுலட்சகிரந்தப் போக்கை இடித்தும் எண்ணாயிரமாம் என்பாட்டர்சொன்னார்
கவுஷத மெண்ணாயிரத்தைத் திரட்டித்தானும் கதித்த ஐயாயிரமாய் பின்புசொன்னார்
மவயஷத மூவாயிரமும் ஆயிரம்பின்பு சொன்னார்முந்நூறு முப்பத்து மூன்றென்றாரே
98.
என்றாரே சாற்றினதோர் நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான்
கன்றாரே கரும்பான பாகுபோல்திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார்
தன்றாரே தந்தை காலாங்கிநாதர் தாமுமோ சகலநூல்பார்த்துத் தேர்ந்து
அண்டாரே யகண்டம்போ லஞ்சுகாண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே
99.
அலாவினேன் நூற்றறுபதா மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராய்ந்துபார்த்தேன்
துளாவினேன் பாட்டருட னென்நூலைஐயர்துதி செய்தேன்சுருதியாம் வாக்கியத்தை
கலாவினேன் காலாங்கி நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும்
விளாவினேன் ரிஷிசித்தர் நூலையெல்லாம் வெட்டவெளி யாய்திறந்து வீசினேனே
100.
வீசினேன் ஏழுகாண்ட முடுக்காய்சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டுசொன்னேன்
தூசினேன் சூத்திரந்தான் எழுநூற்றுசொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு
பூசினேன் யோகத்துக்கு உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன்
ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன் உறுதியாம் வாசியென்ற யோகந்தானே
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
|| |More videos || || Contact தொடர்பு ||
இந்த பாடல்களின் அர்த்தம் அறிவது எப்படி என கூறுங்கள்
ReplyDeleteSOUL WISDOM ENRICHING PROCESS BY LEARNING BOGHUR EXPERIENCE OF LIFE IN ORDER TO WORSHIP GOD WITHIN US.
ReplyDeleteபுரியவில்லை. புரிந்து கொள்வதற்க்கு வேற வழி உள்ளதா?
ReplyDeleteஇது போகரின் பாடல் என்பதற்க்கு என்ன சான்று
ReplyDelete